மதுபானக் கடைகளில் திடீர் சோதனை
கொழும்பு பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்யும் ஆர்.பி.04 உரிமம் பெற்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதுகாப்பு முத்திரைகள் இல்லாத மற்றும் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு முத்திரையுடன் கூடிய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பாதுகாப்பு முத்திரை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட உரிமம் பெற்ற வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
குறித்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.