மண் சரிவு போக்குவரத்து முற்றாக தடை

பலாங்கொடை வேலிஓயா வீதியில் பெல்லங்கள நுஙே பிரதேசத்தில்  பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் பலாங்கொடை வேலிஓயா வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பலாங்கொடையில் இருந்து கல்தொட்ட ,வேலிஓயா ,தியவின்ன மொனராகலை, தனமல்வில, கதிர்காமம் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் சாரதிகள் மற்றும் கல்தொட்ட ஊடாக பலாங்கொடை ,கூரகல புனித பூமி,தந்தார் ஜெய்லானி பள்ளிவாசல் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கல்தொட்ட காவற்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.