மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்-

“அவளுடைய பலம் – நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் மகளிர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் முதல் நிகழ்வாக கலைகள் மற்றும் அரங்க விளையாட்டுகளின் மூலமாக “மகளிர் மனவெழுச்சி ஆற்றுப்படுத்துகை” எனும் 2 நாட்களை கொண்ட பயிற்சி நெறியானது பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 45 மகளிர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் வளவாளர்களாக ம. நிரோஷினிதேவி (சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு), வி.சிந்து உஷா (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் ப. ராஜதிலகன் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பான முறையில் நடாத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்