மட்டு.பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் என தெரிவித்து இன்று புதன்கிழமை வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய கல்வி சமூகத்தினால் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வலயக்கல்விப் பணிப்பாளர் சிறீதரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை வலயத்திலிருந்து வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த வலயத்திலுள்ள ஏனைய 69 பாடசாலைகளும் வலயக்கல்விப் பணிபாளருக்கு ஆதரவளித்துள்ள நிலையில் இன்று இருபது பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் இணைந்து வலயக்கல்விப்பணிப்பாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்