மட்டு. ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை பாராளுமன்றத் தேர்தல் – 2022

சமூக ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்ல தலைமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை பாராளுமன்றத் தேர்தல் – 2022 இடம்பெற்றது.

இந்த செயற்பாட்டின் மூலமாக பாடசாலை மாணவர்கள் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை அறிந்துகொண்டதாக பாடசாலையின் அதிபர் திருமதி ம.சுதாகரி தெரிவித்தார்.

இந்தச் செயற்பாடுகள் மூலம் தேர்தல் மற்றும் தங்களை ஒரு தலைவராக உருவாக்குவதற்கு பாடசாலையிலும் சமூகத்திலும் இத்தகைய நேர்மனப்பாங்கான அணுகுமுறை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்லும் திறனை மனப்பாங்கை பெறுவார்கள் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

1.சுத்தமான சூழல்
2.மனிதநேயம்
3.நல்ல குடிமக்களாக இருத்தல்
4.கீழ்ப்படிதலுள்ள மாணவராக இருத்தல்
5.விதிகள் மற்றும் சட்டம் போன்றவற்றை மதிக்கவும் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இன்றைய தேர்தல் இடம்பெற்றது.

இன்று பாடசாலை விடுமுறையென அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வலயக்கல்விப் பணிப்பாளரிடம் விசேட அனுமதி பெற்று பாடசாலைச் செயற்பாட்டை முன்னெடுத்த நிலையில் மாணவர்கள் மிகவும் விருப்பத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விசேட செயற்பாட்டை பயனுள்ளவாறு வினைத்திறன் மிக்கதாக முன்னெடுத்த உயர்தரப்பிரிவுக்கான பகுதித் தலைவர் சி.தெய்வேந்திரம் மற்றும் அணியாகச் சேர்ந்து ஒத்துழைப்பு நல்கிய அத்தனை ஆசிரியர்களுக்கும், ஆர்வமுடன் பங்குகொண்ட மாணவர்களுக்கும் அதிபர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.