
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பில் வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூசைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளிய நிலையில் பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது ஆலயத்தை சுற்றியதுடன் ஊரில் உள்ள முதியோர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு தரிசனம் வழங்குவதற்காக ஊரை சுற்றி வலம் வந்தது.
கடந்த 2ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் ஆரம்பமாகி இன்று தேர் திருவிழாவும் இடம்பெற்றது. நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.