மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை

கடந்த 24 மணித்தியாலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகின்றது.

வீதிகளும் தாழ்நில பகுதிகளும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில்,பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென், ஊவா, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.