தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வெட்டு அழுல்படுத்தப்படும் என, நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில்,
தற்போது வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து செல்கிறது. இந்நிலையில் தொடர்ச்சியான நீர்வழங்கலை மேற்கொள்வது எமக்கு சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் 22 ஆகஸ்ட் 2026 முதல், நாளாந்தம் நீர்வெட்டை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (உத்தேச நீர்வெட்டு நேரம் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை)
மேலும், இந்நிலமை வழமைக்கு திரும்பும் வரை நீர்ப்பாவனையார்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம், என குறிப்பிடப்பட்டுள்ளது.










