மட்டக்களப்பில் குப்பைகள் நிறைந்து நீர்வழிந்தோட முடியாத நிலையில் காணப்பட்ட வடிகான்கள் மட்டக்களப்பு மாநகர சபையால் துப்பரவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள முதலியார் சின்னலெப்பை வீதியில் உள்ள வடிகானில் கழிவு நீர் வழிந்தோட முடியாது தேங்கி வழிந்து வீதியில் நின்று கடுமையான துர்நாற்றம் வீசிய நிலை காணப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் விசனம் வெளியிட்டிருந்த நிலையில் இது தொடர்பாக எமது செய்தி சேவை கவனம் செலுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இவ்விடயம் மட்டக்களப்பு மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது வடிகான்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.