
மட்டக்களப்பு பெரிய கல்லாறு மீனவர்கள் பிரதேச சபையிடம் விடுத்துள்ள கோரிக்கை
-கல்முனை நிருபர்-
மட்டக்களப்பு பெரியகல்லாறு ஆற்றில் மிதக்கும் சல்பினியா(ஆற்றுவாழை) எனும் தவாரத்தினால் நன்னிர் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதினால் பெரிய கல்லாறு பாலத்தை அண்டிய ஆற்றங்கரையோரங்களில் பெருமளவிலான ஆற்றுவாழை இனதாவர்ஙகள் மிதக்கின்றன.
இதனால் இங்குள்ள நன்னீர் மீன்பிடி மீனவர்கள் தங்களது தோணி, வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதில் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
இவ் ஆற்றில் மிதிக்கும் சல்பீனியா வகை தாவரங்களை அகற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நன்னீர் மீன்பிடியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.