
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக இன்று செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த சிவானந்தம் சிறிதரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பட்டிருப்பு வலயத்தில் உள்ள சில பாடசாலைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரனை வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரனை வெளியேற்ற வேண்டாம் என தெரிவித்து அவருக்கு ஆதரவாக சில பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
இந்நிலையில் தற்போது பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டு அவர் இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
