களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை வீதியின் களுதாவளை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கெப் ரக வாகமொன்று வீதியில் வீழ்ந்து கிடந்த நபரொருவர் மீது ஏறிச் சென்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த நபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 33 வயதுடைய எருவில் வடக்கு பகுதியைச் சேர்ந்தவராவார்.
சடலம் தற்போது களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.