மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை காணவில்லை? -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை காணவில்லை?-மட்டக்களப்பு மண்முனை பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் முதலையின் பிடியில் சிக்குண்டு காணாமல் போயுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக, ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் மட்டக்களப்பு நாவற்காட்டை பிறப்பிடமாகவும் , புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவருமான அழகுதுரை அழகேசன்(வயது-35) என்பவரே முதலையின் பிடியில் சிக்கி காணாமல் போயுள்ளார்.

இவர் மீன்பிடிப்பதற்காக ஆற்றில் விளக்கை தடியொன்றில் நிறுத்த முற்பட்டுக்கொண்டிருந்த போது முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது , இது தொடர்பான உறுபடுத்தப்பட்ட எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

காணாமல் போயுள்ள மீனவரை பல மணித்தியாலங்களுக்கு மேலும் மீனவர்கள் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் , இதுவரை எவ்வித தகவல்கள் கிடைக்கவில்லை அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரை காணவில்லை?