
மட்டக்களப்பில் பல பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை!
-மட்டக்களப்பு நிருபர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் நேற்று செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட பலத்த காற்றுடனான மழையினால் கல்லடி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் தோணி என்பன சேதமடைந்துள்ளது.
கரையில் இருந்து சற்று மேல் நோக்கி வைக்கப்பட்டிருந்த தோணி மற்றும் படகுகள் காற்றின் வேகம் காரணமாக கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவர்களினால் குறித்த படகுகள் மீட்கப்பட்டு கரையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடற்கரையருகில் இருந்த தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதுடன், கடற்கரைப்பகுதியில் காணப்படும் உணவகம் ஒன்றின் மீது பாரிய சவுக்கு மரம் ஒன்றும் வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

