மட்டக்களப்பில் பண்பாட்டு மண்டபம் திறப்பு விழா

மட்டக்களப்பு திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறப்பு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் மண்டபத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்த நிகழ்விற்கு மண்முனை போரை தீவு பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப்பதாதை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் , மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் , மற்றும் முன்னாள் பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்பிள்ளை என்போர் கௌரவிக்கப்பட்டனர்.