
இனம் தெரியாத ஆணின் சடலம் இன்று புதன் கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய பின் பகுதியில் காலை 9 மணியளவில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியதையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சடலம் இனம் காணப்படவில்லை என்பதுடன் சடலத்திற்கு அருகில் மதுசார போத்தல்கள் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை மரணவிசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
