மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தவறான தொழில்: ஐந்து பெண்கள் கைது

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் கொலன்னாவ, ஹசலக்க, கடவத்தை, வெலிமடை, ஹோமாகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 32-47 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு முன்பாக மசாஜ் நிலையம் எனத் தெரிவித்து விடுதியொன்று இயங்கி வந்துள்ளது. எனினும் குறித்த விடுதியில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் ஐந்து பெண்கள் உட்பட விடுதியின் முகாமையாளரை கைது செய்தனர்.