மகியங்கனையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

மஹியங்கனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

வம் எல மாகடவெவ, அலகொடபிடிய, பகுதியை சேர்ந்த 54 வயதுடையவரே இதன்போது உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்தவரது வீட்டின் பின் பகுதியில் காட்டு யானையின் நடமாட்டம் இருந்ததையடுத்து அதனை விரட்ட முற்பட்ட போது குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையில் மஹியங்கனை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்