மகளை கொன்று மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்து சென்ற கொடூர தந்தை – (வீடியோ)
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் முச்சல் கிராமத்தில் பெற்றோர், மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளோடு வசித்து வருபவர் பாவ். இவர் சீக்கியர்களின் நிஹாங் பிரிவைச் சேர்ந்தவர்.
நான்கு மகள், ஒரு மகன் என ஐந்து வாரிசுகளை உடைய பாவின் குடும்பத்தில்இ மூன்றாவது மகளை காணவில்லை. வீட்டில் தகவல் எதுவும் தெரிவிக்காமல் அந்த 16 வயது பெண் வெளியே சென்றதில் தந்தை பாவ் கோபம் அடைந்தார்.
வெளியே சென்ற பெண் வீட்டுக்கு திரும்பி வந்தார். வந்ததும் ஏன் சொல்லிவிட்டு போகவில்லை எங்கே சென்றுவந்தாய்? என பல கேள்விகளை எழுப்பினார்.
மகள் அமைதியாக இருந்திருக்கிறார், எந்த பதிலும் சொல்லவில்லை. உடனே ஆத்திரத்தில் கையிலிருந்த கூர்மையான ஆயுதத்தால் மகளை ஆத்திரம் தீரக் குத்திக் கொலை செய்தார்.
இச்சம்பவம் குறித்து குடும்பத்தில் எவரேனும் வெளியே கூறினால் அவர்களுக்கும் இதே கதி தான் என மிரட்டல் விடுத்தார். மகளின் சடலத்தை பைக்கில் கட்டி தரதரவென சுமார் அரை கிமீ தொலைவுக்கு கிராமத்தின் சாலைகளில் உயிரிழந்த மகளை இழுத்து சென்றார். கடைசியில் ஊர் எல்லையில் இருந்த தண்டவாளத்தில் மகள் சடலத்தை வீசிவிட்டு தலைமறைவாகி விட்டார்.
குடும்பத்தினர் அச்சத்தில் வாய் மூடியிருந்த போதும்இ ஊருக்குள் நேரில் பார்த்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் பாவ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெற்ற மகளை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
CCTV footage captures an honor killing incident where a father can be seen dragging his daughter, tying her to his motorcycle. Later, her dead body was found near railway lines. The girl had escaped from home with a guy. https://t.co/ltQx2Bzle5 pic.twitter.com/3XkJVARzAc
— Gagandeep Singh (@Gagan4344) August 10, 2023
