போலி விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

-யாழ் நிருபர்-

போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்