போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறை வேண்டும் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறை வேண்டும் என கோரி, மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் காந்தி பூங்காக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று இலங்ககையில் பல மாவட்டங்களில் குறித்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்பட்ட பொறிமுறை வேண்டும், வடக்கு கிழக்கில் உள்ள தமிழக தாயகங்களை அபகரிக்க வேண்டாம், வடக்குக் கிழக்கு பூர்வீக நிலங்களை அபகரிக்க வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஒரு சர்வதேச விசாரணை வேண்டும், என பல கோஷங்கள் அடங்கிய பதாகைகளுடன் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதன் போது சர்வதேச பொறிமுறை ஒன்றை வலியுறுத்திய மகஜர் ஒன்றையும் மட்டக்களப்பு மனித உரிமை ஆணையத்துக்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கது.