போதை மாத்திரை மற்றும் கசிப்புடன் நான்கு பேர் கைது

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் மூவரும், கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்டு இருந்த ஒருவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகளுடன் பசறை பதுளை வீதி 10 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 27, 25, 21 வயதுடைய மூவரும் கசிப்புடன் பசறை எல்டப் கீழ் பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் செவ்வாய் கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.