போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரம்

-நானுஓயா நிருபர்-

 

நாடு பூராகவும் போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இந்நிலையில் நானுஓயா பிரதான நகரில் இன்று  திங்கட்கிழமை   விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக நானுஓயா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும் அவர்கள் கொண்டு செல்லும் பொதிகளையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

நானுஓயா பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் சகிதம் இவ் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

அத்துடன் நானுஓயா பிரதான வீதியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களையும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் , வாகனங்களில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரியும் இளைஞர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.