போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரபல வர்த்தகரின் மகன் கைது

அனுராதபுரம் – கெக்கிராவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் நேற்று புதன்கிழமை ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த “சோனி” என்ற பிரபல வர்த்தகரின் 32 வயதுடைய மகனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது தந்தையின் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து தபால் மூலமாக போதைப்பொருளை கடத்தி அவற்றை பொதிகளாக தயாரித்து வேறு பிரதேசங்களுக்கு அனுப்பி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.