போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் “கானுலா” பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும், குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளார்.