பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

கம்பகா மாவட்டத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தப்பி சென்றவரை கைத செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்டகொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்