பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஊழியர்கள் கௌரவிப்பு
-கல்முனை நிருபர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நோயாளிகளுக்கும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் தரமான சுகாதாரமான மலிவான தொற்றா நோயை தவிர்க்கும் விதமான உணவகம், நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டீ. ஜீ. மலின்டன் கொஷ்டா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் டீ.ஆர்.எஸ்.டீ. ரஜாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மரநடுகையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் மற்றும் பணிமனையின் பிரிவுத்தலைவர்கள், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், அபிவிருத்திக் குழுவினர் உள்ளிட்ட பெருந்திரளான பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டனர்.