பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் விஜயம்

 

-மன்னார் நிருபர்-

மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று சனிக்கிழமை  காலை விஜயம் செய்தார்.

இதன் போது, வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களை சந்தித்து தற்போது வைத்தியசாலை மற்றும் வைத்தியர்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.

மேலும் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசிய தேவைகள் குறித்தும் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.