
பெற்றோல் கையிருப்பில் இருந்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களுக்கு விநியோகிக்கவில்லை
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் கையிருப்பு உள்ள போதிலும், அந்த எரிபொருளை விநியோகிக்காமல் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் தமது சங்கத்தின் கொள்கலன் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அதன் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நாளை வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என எரிசக்தி அமைச்சு நேற்று அறிவித்தது.
இதன்படி, அடுத்த சில நாட்களில் மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1500 ரூபா வரையிலான எரிபொருள் வழங்கப்படவுள்ளதுடன், முச்சக்கர வண்டிக்கு அதிகபட்சமாக 2000 ரூபா வரையிலான எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
மற்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 7,000 ரூபாய்க்கு உட்பட்டு எரிபொருள் வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது