வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 12 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் “ஐஸ்” என அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளுடன் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபரிடமிருந்து 4.17 கிலோகிராம் ஹெரோயினும், 8.055 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டிய, சேதவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இந்த போதைப்பொருட்கள் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










