பெரிய வெள்ளியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைதல் மற்றும் அவரின் மரணம் ஆகியவற்றை நினைவுக்கூறும் வகையில் பெரிய வெள்ளி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நாளிள் உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் தேவாலங்களுக்கு சென்று வழிப்பாடுகளிள் ஈடுபடுவார்கள்.

புனித வெள்ளியிலிருந்து உயிர்த்த ஞாயிறு தினம் வரை தேவாலயங்களில் வழிப்பாடுகள் இடம்பெறும் அந்த வழிப்பாடுகளில் கலந்துக்கொள்பவர்களின் பாதுகாப்பிற்காக தேவாலயங்களுக்கு பொலிஸ் அதிரடிப்படையினர், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் முப்படையினர் கொண்ட விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.