கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு 55-ஆம் கட்டை பகுதியில், புதையல் தோண்டிய இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு, குறித்த பகுதியில் 8 பேர் கொண்ட குழுவினர் புதையல் தோண்ட முயற்சிப்பதாக, கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, குறித்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொழும்பு, சிலாபம், புத்தளம், யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, குருணாகலை ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும், சிறிய ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது










