புதையல் தேடி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி  இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி – திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  17 அடி வரை  அகழ்வு பணிகள்  நடைபெற்றது.

அகழ்வு இடம்பெற்ற இடத்தில் எந்தவித தடையங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் இன்று ஞாயிற்று கிழமை கிரமசேவகர் முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.