புணர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புணர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்று சனிக்கிழமை தர்மபுரம் புணர்வாழ்வு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த எஸ். லக்சன் (வயது – 25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24