பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மையமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.