பிரசன்ன ரணதுங்கவிற்கு இரண்டு வருட சிறை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் வழங்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள், கொலன்னாவை மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள காணியில் வசித்துவந்த அனுமதியற்ற குடியிருப்பாளர்களை வெளியேற்றி, அதனை சீரமைத்துதரும் பணிகளை நிறைவேற்றி கொடுப்பதற்காக  ஜெராட் மென்டிஸ் என்ற வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா கப்பமாக கோரிய குற்றச்சாட்டில் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் பாரிக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதி தரப்பு சாட்சியங்கள் முன்னதாக நிறைவுறுத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.