பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல்!

நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரால் கத்தியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தேடப்படும் குற்றவாளியான வெடிக்கார தொரயலகே விக்டர் விஜேதுங்க கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் கேகாலை, பெலிகல, போதவல பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவரை கைது செய்ய பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபர் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதுடன், தாக்குதலைத் தடுக்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பெலிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் சார்ஜன்ட் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்இ கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.