சாய்ந்தமருது மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர்

-கல்முனை நிருபர்-

ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பாலமுனை அரபா விளையாட்டு கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் அமைப்பு சம்பியனானது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுத் தொடரில் 13 அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டு இறுதிப் போட்டியிற்கு சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் மற்றும் பாலமுனை அரபா விளையாட்டு கழகம் ஆகிய இரு அணிகளும் தெரிவு செய்யப்பட்டன.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அணித் தலைவர் தனது அணியை முதலில் களத்தடுப்பிற்கு பணித்திருந்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பாலமுனை அரபா அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 05 ஓவர்களில் 36 ஓட்டங்களை எதிர்அணியினருக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தார்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டம் வீரர்கள் 04 பந்துவீச்சுப் பிரதிகளை மீதம் வைத்து 04 விக்கட்டுக்களை இழந்து தங்களுடைய வெற்றியினை பதிவு செய்திருந்தார்கள்.

இச்சுற்றுத் தொடரினுடைய சிறந்த துடுப்பாட்ட வீரராக பாலமுனை அரபா வி.கழக அணித்தலைவர் ஹம்சா தெரிவு செய்யப்பட்டதோடு சிறந்த பந்துவீச்சாளராக ஸாஜித் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த களத்தடுப்பாளராக ஆசிக் மற்றும் சுற்றுத் தொடரினுடைய சிறந்த வீரராக பாலமுனை அரபா அணி வீரரும் தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு இச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியினுடைய சிறந்த வீரராக ஸகீப் தெரிவு செய்யப்பட்டு, அனைவருக்கும் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இச்சுற்றுத் தொடரானது அமைப்பினுடைய விளையாட்டுக்குழுத் தலைவரும் இச் சுற்றுத் தொடரினுடைய தவிசாளருமான அ. மு. ஆதில் தலைமையில் இடம்பெற்றதோடு இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் கலந்து கொண்டதுடன், விஷேட அதிதிகளாக ரஹ்மத் பவுண்டேஷன் ஆலோசகரும் ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட ஆலோசகருமான இர்பான் ஹாபீஸ், ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்டத்தின் செய‌ற்குழு உறுப்பினர் காஜா நவாஸ், ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட பொதுச் செயலாளர் லா. மு. ஷிப்னாஸ், ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.எம். முஸ்பீக்,  பொருளாளர் ஏ.ஏ.எம். அப்ரார், சன் பிளவர் விளையாட்டுக் கழக செயலாளர் ஏ.எஸ். அஸ்வர்,   பீமா விளையாட்டுக்கழக முகாமையாளர் எம்.இம்தாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.