டுபாயில் தலைமறைவாகியிருந்த போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான மன்ன ரமேஸ் எனப்படும் முதியன்சலாகே ரமேஸ் பிரியஜனக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அண்மையில் சார்ஜாவில் இருந்து டுபாய் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மன்ன ரமேஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் டுபாய் நோக்கிப் பயணமானது.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக, கொலை குற்றச்சாட்டுக்கள் மற்றும் 10ற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்