பாடலுக்கு நடனமாடியதால் நிறுத்தப்பட்ட திருமணம்
மணமகன் தனது திருமண நாளில் இந்தி பாடலொன்றுக்கு நடனமாடியதன் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று டெல்லியில் இடம் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருமண நாளில், மணமகனின் நண்பர்கள் “சோலி கே பீச்சே க்யா ஹே” பாடலைப் பாட மணமகனை அழைத்துள்ளனர்.
தனது நண்பர்களின் அழைப்பை ஏற்று மணமகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடலை பாடி நடனமாடியதாகவும் , விழா மண்டத்திற்கு வந்திருந்த அனைவரும் கைகளை தட்டி கொண்டாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கோபமடைந்த மணமகளின் தந்தை திருமண நிகழ்வில் இது ஒரு பொருத்தமற்ற விடயமாக கருதி உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மணமகனின் செயல்கள் அவரது குடும்ப விழுமியங்களை அவமதிப்பதாக மணமகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
மணமகன், மணமகளின் தந்தையிடம் இது ஒரு வேடிக்கையாக செய்யப்பட்ட நிகழ்வு என தெரிவித்தும் மணமகளின் தந்தை தனது முடிவில் உறுதியாக இருந்ததுடன் திருமணத்தை தொடர மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சாதாரண காரணத்திற்காக திருமணம் ரத்து செய்யப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனின் திருமணம் உணவு விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தால் அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.