பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கொவிட் 19 அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களை சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சிறு குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல், சளி, தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்..

இதேவேளை, நாட்டில் நேற்று புதன்கிழமை 154 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று மேலும் 04 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், மீண்டும் கொவிட் வைரஸ் பரவல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென, அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

மேலும், கொவிட் வைரஸைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுதல் போன்றவற்றை மீண்டும் மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.