
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.
இதன்போது மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தின் சுற்றுமதில் பாடசாலையில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள் போன்றவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையின் சுற்றுமதிலை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டு யானை அட்டகாசம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவைகள் தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே குறித்த விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தமக்கான தீர்வினை பெற்று தர வேண்டும் என மல்லிகைத்தீவு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
