பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு

பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்களின் நடவடிக்கைகளினால் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அதிபர்களின் இடமாற்றம் குறித்து உடனடியாக தீர்வு வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதன் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.