
பாகிஸ்தானில் நிலவும் மழையுடனான வானிலை: 20 பேர் பலி
பாகிஸ்தானில் நிலவும் மழையுடனான வானிலையினால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தொண்ணூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் காற்றினால் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.