பளை மத்திய கல்லூரி மாணவனின் சாதனை

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்ட பளை மத்திய கல்லூரி மாணவன் மீண்டும் ஈட்டி எறிதலில் தேசிய ரீதியில் 03வது இடத்தை பெற்றுள்ளார்.

தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்ற 52வது யூனியர் ஜோன் டாபட் தேசிய ரீதியிலான 15வயது பிரிவுஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 46.35m தூரம் ஈட்டி எறிந்து 03ம் இடத்தை பெற்றுள்ளார்.

இதற்கு முதல் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான ஈட்டி எறிதலில் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் R. எழில்பிரியன் மூன்றாம் இடம் பெற்றிருந்த  குறிப்பிடத்தக்கது.

இதே போல் கிளி/பளைமத்திய கல்லூரி வரலாற்று சாதனை(ஆண்கள் பிரிவில் முதல் இடம்) நடை பெற்று முடிந்த Junior jhon trabet stage 1 championship வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்த 15 வயதுக்குட்படோருக்கான தடகள போட்டியில் 6 தங்கப்பதக்கம் 2 வெள்ளிப்பதக்கம் 3வெண்கலப்பதக்கத்தை பளை மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது

இதில் ஆண்கள் பிரிவில் 79 புள்ளிகளை பெற்று ஆண்களுக்கான தரப்படுத்தலில் 1இடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்