பலத்த காற்றினால் வீட்டிற்கு மேல் குடை சாய்ந்த வேம்பு

-யாழ் நிருபர்-

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக சுழிபுரம் – நெல்லியான் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீட்டிற்கு அருகில் இருந்த வேம்பு குடைசாய்ந்துள்ளது.

இதன்காரணமாக வீட்டிற்கு பெரிய அளவில் பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.

சம்பவத்தின்போது வீட்டில் உள்ளவர்கள் வெளியேறினர்.

இதனால் அவர்களுக்குப் பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.

கணவன் இன்றி வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டின்மீதே இவ்வாறு மரம் குடை சாய்ந்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24