கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் நேற்று திங்கட்கிழமை மாலை மொஸ்கோவிற்கு பறந்து சென்றது.
குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்டது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்றம் குறித்த இடைக்கால உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டது.
இந்நிலையில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் அவரது குழுவினர், ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானிகள் உட்பட்ட குழுவினரிடம் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பில் மன்னிப்பு கோரி அவர்களுக்கு அன்பளிப்பாக தேயிலை, கஜு வழங்கி சந்தோஷமாக அனுப்பி வைத்தனர்.