பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்-

பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் இணைந்து வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான மருந்துகள் இன்மை, நோயாளர்களுக்கான‌ உணவு வழங்கப்படாமை மற்றும் நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு தீர்வை பெற்று தருமாறு கோரி அரசுக்கு எதிராக பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.