படகு கவிழ்ந்ததில் மாணவன் பலி

செல்லக்கதிர்காமம் அக்கர விஸ்ஸ வாவியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

இவ்விபத்தில் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த பிரமோத் (வயது – 19) என்ற இளைஞனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

உயிர் இழந்த மாணவன் உட்பட 5 மாணவர்கள் படகு ஒன்றில் பயணித்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீரில் மூழ்கி ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் கிராமவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்