நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம்

வவுனியா செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வீதியை குறுக்கறுத்து அட்டகாசம் செய்கின்றன.

பறயனாளங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இன்று செவ்வாய் கிழமை காலை நிகழ்ந்துள்ளது.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் பல மின்கம்பகளை உடைத்து யானைகள் சேதமாக்கியிருந்தன.

இந்நிலையில் இன்று காலை நோயாளர்களை ஏற்றிவந்த நோயாளர் காவு வண்டியையும் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளது.

மேலும் இவ்வீதியூடாக பயணிப்பவர்களும் அண்மித்து உள்ள கிராமவாசிகளும் உயிர் அச்சுறுத்தலுடனேயே எந்நேரமும் காணப்படுகின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்